கடவுளின் குழந்தை
அந்த நாள் எப்போதும் போல எல்லாருக்கும் விடிந்தது. 7 மணி, ஏழு முறை கடிகாரம் டொய்ங் டொய்ங் 🎵 அடிச்சது. ஆதி ஜாகிங் முடிச்சிட்டு உள்ள வந்தான், நேரா குளிக்க போனான், குளிச்சவன் அவனோட தியான அறைக்கு போனான். 7.30கு உள்ள போனவன் சரியா ஒன்பது மணி அடிக்கும் முன்ன கண் விழுச்சுட்டான். அவன் இதுவரைக்கும் மணி பாத்ததே இல்ல தியானம் பண்றப்போ. தனிமையில் வாழும் ஆதி அவனே அவனோட எல்லா வேலைகளையும் செஞ்சிப்பான். பல ஆயிரம் குடுத்து வேலைக்கு ஆள் வைக்கும் வசதி இருந்தும், அவனுக்கு அது பிடிக்கல. எழுந்து கிச்சனுக்கு போனான், காலை உணவு எல்லாம் dry nuts மற்றும் fresh fruits. சாப்பிட்டுட்டு கார் சாவிய எடுத்துக்கிட்டு கெளம்பிட்டான். கார் சென்னையின் ட்ராபிக் ல கொஞ்சம் நிதானமா போச்சு, இது வரை யார் மேலயும் பைக்லயோ கார்லயோ இடிச்சதே இல்ல. இவன் மேல இடிக்க வந்து, இவன் ஒதுங்கி நெறய பேர் கீழ விழுந்துருக்காங்க, ஆனா அவங்கள நேர மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போய், டிரீட்மென்ட் செஞ்சு தான் அனுப்பி விட்ருக்கான் ஆதி. ஆதி ஒரு மருத்துவர், தமிழ்நாட்ல பள்ளி இறுதி தேர்வுல முதன்மை மாணவனா வ...