கடவுளின் குழந்தை

அந்த நாள் எப்போதும் போல எல்லாருக்கும் விடிந்தது. 
7 மணி, ஏழு முறை கடிகாரம் டொய்ங் டொய்ங் 🎵 அடிச்சது. 
ஆதி ஜாகிங் முடிச்சிட்டு உள்ள வந்தான், 
நேரா குளிக்க போனான், குளிச்சவன் அவனோட தியான அறைக்கு போனான். 7.30கு உள்ள போனவன் சரியா ஒன்பது மணி அடிக்கும் முன்ன கண் விழுச்சுட்டான். 
அவன் இதுவரைக்கும் மணி பாத்ததே இல்ல தியானம் பண்றப்போ. தனிமையில்  வாழும் ஆதி அவனே அவனோட எல்லா வேலைகளையும் செஞ்சிப்பான். பல ஆயிரம் குடுத்து வேலைக்கு ஆள் வைக்கும் வசதி இருந்தும், அவனுக்கு அது பிடிக்கல. 
எழுந்து கிச்சனுக்கு போனான், காலை உணவு எல்லாம் dry nuts மற்றும் fresh fruits.  
சாப்பிட்டுட்டு கார் சாவிய எடுத்துக்கிட்டு கெளம்பிட்டான். கார் சென்னையின் ட்ராபிக் ல கொஞ்சம் நிதானமா போச்சு, இது வரை யார் மேலயும் பைக்லயோ கார்லயோ இடிச்சதே இல்ல. 
இவன் மேல இடிக்க வந்து, இவன் ஒதுங்கி நெறய பேர் கீழ விழுந்துருக்காங்க, ஆனா அவங்கள நேர மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போய், டிரீட்மென்ட் செஞ்சு தான் அனுப்பி விட்ருக்கான் ஆதி. 
ஆதி ஒரு மருத்துவர், தமிழ்நாட்ல பள்ளி இறுதி தேர்வுல முதன்மை மாணவனா வந்து இலவச இட ஒதுக்கீடுல படிச்சு தங்கப்பதக்கம் வாங்கின மாணவன். 
மேல் படிப்புக்காக பல இடங்கள்ல கூப்பிட்டும் போகாம, சென்னைலயே படிச்சு குழந்தைகள் நல மருத்துவரான ஆதி தான் இப்போ இந்தியாவுல மட்டுமில்லாம உலகத்துலயே சிறார் நல மருத்துவத்துல முதல். 
ஆனாலும் தனியா ஒரு மருத்துவமனை கட்டல, தனியாருக்கு போய் மருத்துவம் செய்யல. எல்லாமே தான் படிச்சு மேல வந்த அதே மதராஸ் மருத்துவ கல்லூரில தான் வேலை செய்யறான். 
Hospital உள்ள வர ஆதியை பாத்துட்டு அங்க வேலை செய்யற எல்லாரும் வணக்கம் சொல்ல, இவனும் எல்லாருக்கும் வணக்கம் சொல்லிகிட்டே வந்து, குழந்தைகள் நல  உள் நோயாளிகள் பிரிவுக்கு வந்தான். 
"Good morning doctor", ப்ரியா அங்க இவனோட assistant. 

கல்லூரியில் படிக்கறப்போ ஆதி கண்ணாடி போட்டுக்கிட்டு ரொம்ப அமைதியான பையனா இருப்பான், பேச்சு இருக்காது, ஆமாம் இல்ல பதில் வரும். யாராவது சந்தேகம் கேட்டா அவன் விளக்கம் குடுக்கறத கேக்க ஒரு கூட்டமே கூடிடும். 
கல்லூரியில் படிக்கறப்போ எல்லாரும் சந்திக்கற பிரச்னையை அவனும் சந்திச்சான். 
அந்த கல்லூரியில் அசைவ உணவு சாப்பிடாத ஒரே ஆள் இவன்தான். ஆதி கல்லூரியில சேர்ந்தப்போ ராக்கிங் ல அதும் சாப்பிடறப்போ பல கஷ்டங்களை அனுபவிச்சான். அமைதியா, எதிர்த்து பேசாம, சண்டை போடாம இருக்க ஒரே ஆள். கேக்கவா வேணும். சாப்பிடறப்போ அவனோட சாப்பாட்டுல ஒரு பெரிய chicken piece எடுத்து போட்டு சாப்பிட சொன்னான் senior. அன்னைக்கு சாப்பிடாம இருந்தான் இவன். இதே போல பல நாள் நடக்க. ஒரு நாள் தமிழ் இவன் கிட்ட சந்தேகம் கேட்கும் senior இதை தெரிஞ்சிக்கிட்டு இவனுக்காக தினமும் சாப்பாடு  அவன் வீட்டுல இருந்து கொண்டு வருவான். பல பேரோட அன்பும் ஆதரவும் இருந்துச்சு. அதே சமயம் பல பேரோட பொறாமையும் இருந்துச்சு. இவனுக்கு பேரே நல்லவன்னு வச்சிட்டானுங்க. இவன் அசைவம் சாப்பிடாதது எல்லாருக்கும் தெரியும். யாருக்கும் கெடுதல் நெனைக்க மாட்டான்னு தெரியும், எல்லாருக்கும் நியாமா உதவி செய்வான்னு தெரியும். ஒருநாள் ஸ்ரீராம் கேட்டான், "ஏண்டா ஆதி நீதான் அசைவம் சாப்பிட மாட்ட, அப்புறம் எப்டிடா கத்தி பிடிச்சு தோலை கிழிப்ப, ரத்தம் வரும், smell வரும்". 
"ஸ்ரீராம்  நான் உயிரை  அதெல்லாம் சகிச்சிக்கிட்டு செய்வேன். உயிரை ருசி பாக்க நான் அதை கொலை செய்ய மாட்டேன். வேணும்னா இங்க பாரு" அப்டினு surgical knife பிடிச்சு காமிச்சான் கை நடுங்ல மெதுவா அந்த specimen கிழுச்சு காமிச்சான். அதோட ஸ்ரீராம்  ஒத்துக்கிட்டான், உனக்குள்ள ஏதோ ஒரு அருள் இருக்குன்னு சொல்லிட்டு போனான்.என்னமோ தெரியல ஆதிக்கு எதுவுமே சாதாரண ஒரு மனித உணர்ச்சிகள் எப்போவாச்சும் வரும் அதே போல வந்ததுதான் காதல். ப்ரியா அவனோட classmate தான் ஆனா அவளுக்கு இவனை பிடிக்கவே பிடிக்காது. இவன் dressing, கண்ணாடி, எல்லாம் அவளுக்கு எரிச்சலா இருக்கும். இவன் அசைவம் வேற சாப்பிட மாட்டான் இவனை மாதிரி ஆளுக்கெல்லாம் கல்யாணமே நடக்குதுன்னு சொல்லுவா. ஒரு நாள் இவனே போய் நான் உன்ன காதலிக்கிறேன் அப்டினு சொல்ல, இவனை எல்லாருக்கும் முன்னாடி பேசி அசிங்கப்படுத்தி அனுப்பிட்டா. கல்லூரியில் படிச்ச எல்லாருக்கும் தெரிஞ்சுது, அவனோட டீன் கூப்பிட்டாரு. உன்னை போல ஒருத்தன அவ miss பண்ணிட்டா, நீ இதை மனசில போட்டுக்காம உன்னோட இலட்சியத்தை அடைய முயற்சி எடு அப்டினு சொன்னாரு. வருடங்கள் கடந்து போச்சு, ஆதி பழக்க வழக்கம், நடவடிக்கை மறிச்சு, அமைதியும் அன்பும் அதிகமாச்சு,எல்லா தகுதியும் அளவுக்கு அதிகமாவே இருந்துச்சு, எந்த ப்ரியா இவனை வேணாம்னு சொன்னாலோ அவளோட senior posting இவனுக்கு வந்துச்சு. ஆனா எந்த ஒரு விருப்பு வெறுப்பு இல்லாம அவன் வேலைய பத்தி மட்டும் பேசறது இவளுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இவனுக்கு அவ மேல (யார் மேலயும் )இப்போ எந்த ஒரு காதலும் இல்ல அப்டினு தெளிவா புரிஞ்சது. இவனோட senior தமிழோட குழந்தைக்கு brain tumour ஆதி operation செஞ்சு மறுநாளே பேசினான் தமிழோட பையன். தமிழ் கையெடுத்து கும்பிட்டான், அவனை கட்டி அணைச்சுகிட்டான் ஆதி.
அன்னைக்கு காலைல meditation பண்றப்போ யாரோ தலைல ஊசி குத்தற மாதிரி வலி, அடுத்த நொடி ஏதோ ஒரு வித்தியாசமான நிலை, ஆனா அது ரொம்ப பிடிச்சது ஆதிக்கு. 
மூனு நாளா ஆதியை காணாம எல்லாரும் phone செஞ்சு switch off ஆகிட்டு phone. 
காலைல தமிழ் வீட்டுக்கே வந்துட்டான், கூடவே ப்ரியா வந்தா. 
Balcony வழியா ஏறி உள்ள போய் பாத்த தமிழுக்கு ஒரே ஆச்சரியமா இருந்துச்சு, வீடு முழுக்க காலைல பரிச்ச பூக்கள், அப்போ ஏத்தி வச்ச சாம்பிராணி. ஆனா ஆதியை பாத்தா மூனு நாளா எழுதிருக்காத மாதிரி இருக்கு. கதவை திறந்து விட்டான் ப்ரியா உள்ள வந்து பாத்து ஒன்னும் புரியாம நின்னா. 
ஆள் நடமாட்டம் ஆதிக்கு இந்த உலக நினைவை குடுத்துச்சு. கண் விழிச்சு பாக்கறப்போ அங்க தமிழும் ப்ரியாவும் அவனையே வெறிச்சு பாத்துகிட்டு இருந்தது புரிஞ்சது. 
லேசா ரெண்டு பேரையும் பார்த்து சிரிச்சவன், எழுந்து போய் refresh பண்ணிட்டு வந்தான். "என்ன ரொம்ப நேரமா wait பண்றீங்களா" ஆதி கேட்டான். 
"டேய் மூனு நாளா நீ hospital வரல டா, என்னடா இது, உன்ன சுத்தி பூ சாம்பிராணி புகை, என்னடா நடக்குது இங்க". 
ஆதிக்கு புரிய ஆரம்பிச்சது தன்னோட மாற்றம். "சரி கொஞ்சம் wait பண்ணுங்க hospital போலாம்"னு சொல்லிட்டு குளிக்க போய்ட்டான். 
ப்ரியா கேட்டா, "தமிழ் நான் இப்போ அவன் கிட்ட பேசினா என்ன நினைப்பான்?"
தமிழ், "அவனை புரிஞ்சிக்கவே முடியல ப்ரியா.நீங்க ஆதியை கல்யாணம் செஞ்சிக்கணும் நினைக்கறது இனிமே சாத்தியம் இல்லனு நினைக்கறேன்". 
ஆதி வந்தான் மூனு பேரும் hospital கிளம்பினாங்க. வழில ப்ரியா அவன்கிட்ட கேட்டா, "ஆதி உன்ன பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசை படறேன், உன்னோட விருப்பம் என்ன?".
ஆதி, "ஒரு மூனு நாள் முன்னாடி சொல்லிருந்தா கூட வேற பதில் சொல்லிருப்பேனா தெரியாது, இனிமேல் கல்யாணம் பண்ணிக்கற ஆசை எனக்கில்லை ".
அமைதியா car hospital வாசல்ல வந்து நின்னுச்சு. இவங்க ரெண்டு பேரும் இறங்கிக்க parking பண்ண போய்ட்டான் ஆதி. 
தமிழ் நேரா போய் டீன் கிட்ட சொல்லிட்டான், இத கேட்ட டீன் ஆச்சரியமா பாத்தாரு. ஆதி வந்தோன அவனை எழுந்து கும்பிட்டாரு. 
டீன் "பல கஷ்டங்களையும் அவமானங்களையும் தாண்டி ஒரு உயர்ந்த நிலைக்கு வந்திருக்க, பல உயிர்களை காப்பாத்திருக்க, நீ இப்படி ஒரு நிலை அடைஞ்சது சந்தோசமா இருக்குனு சொன்னாரு". 
ஆதி அவனோட resignation குடுத்தான். அவரும் அதை accept பண்ணிகிட்டாரு. அவன் இன்னும் மூனு மாசத்துல போறான்னு தெரிஞ்சு பல பேர் வந்து அவன்கிட்ட checkup பண்ணிட்டு போனாங்க, doctor நீங்க போய்ட்டா எங்கள யாரு பத்துப்பான்னு கேட்ட குட்டி பசங்களுக்கு கடவுள் பாத்துப்பாருனு சொன்னான் ஆதி. அந்த குழந்தைகளோட இருந்த அம்மா அப்பாலாம் நீங்க தான் doctor எங்களுக்கு கடவுள், எல்லாரும் கைவிட்டப்போ நீங்க தான் எங்க குழந்தைங்களை காப்பாத்துனீங்க இப்போ நீங்க போய்ட்டா எங்களை போல ஆட்களுக்கு யார் துணைன்னு கேட்டாங்க. 
ஆதி கொஞ்சம் திகைச்சு போய் நின்னான், நேரா டீன் கிட்ட போய் அவனோட resignation லெட்டரை திரும்ப கேட்டான். 

அவனை பார்த்து சிரிச்ச டீன், "ஆதி நீ உண்மையா உன்னை நம்பினவங்களை கைவிட மாட்ட தெரியும், நீ காப்பாற்ற வேண்டிய உயிர்கள் இன்னும் நிறைய இருக்கு"னு சொன்னாரு டீன். 

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

குறள் விளக்கம்:

ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்



 



Comments

Popular posts from this blog

வெயிலோடு மழை

வாழ்வே தவம்

தெளிவு