வாழ்வே தவம்
காரிருள் களைந்து கதிரவன் முளைத்து முக்கால் மணி நேரம் ஆகியிருந்தது. ஏழு முறை கடிகாரம் டிங் டாங் என அடித்தது. jogging முடித்துவிட்டு வீட்டுக்குள் வந்த ஆதி, நேராகக் குளிக்கப் போனான். பதினைந்து நிமிடத்தில் வெளியே வந்தவன், தன் அறையில் சென்று தியானம் செய்ய அமர்ந்தான். அவனுக்கு இது தினமும் மன அமைதிக்கான வழக்கம் என்றாலும், இன்று நேரம் போனதே தெரியாமல் அமர்ந்திருந்தான். அவன் எழுந்திருக்கும் முன்பு அவனைப் பற்றி... தனிமை விரும்பி. அவனது எல்லா வேலைகளையும் அவனே செய்து கொள்வான், சில பல ஆயிரம் கொடுத்து வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளும் வசதி இருந்தும். நன்றாகச் சமைப்பான். பெரும்பாலும் காலை உணவாகப் பழங்களும் காய்கறிகளும் தான். அனைவருக்கும் நன்மை செய்யும் குணம். இனிமையாய்ப் பழகுவான். இதோ தியானத்திலிருந்து எழுந்து வந்தவன், சமையலறைக்குச் சென்று பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். ஆதி சென்னை அரசு மருத்துவமனையில் குழந்தை நல மருத்துவராய் இருக்கிறான். இப்போது அங்குதான் சென்று கொண்டிருக்கிறான். சென்னையின் நெரிசலில் ஆதியின் வண்டி அவனைப் போலவே பொறுமையாய...