அன்பே சிவம்
டேய் சிவம் shoe போட்டியா?? அம்மாவின் குரல் சத்தமா கேட்டுச்சு அந்த மூன்றாம் வகுப்பு குறும்பு பையன் சிவத்துக்கு. வாசல்ல நின்னு நாய்க்குட்டி கூட விளையாடிட்டு இருந்த சிவம் அந்த கருப்பு கலர் நாய் குட்டி கிட்ட பேசிட்டு இருந்தான் !!! நீதான் பிளாக் பியூட்டி ஆஹ். நீ ஏன் இப்டி முழிச்சு பாக்கற என்ன, உன் அம்மா எங்க காணோம், எங்க போச்சு உன் அம்மா. டேய் தங்கம் shoe போடாம அந்த குட்டிக்கிட்ட என்ன டா பேசிட்டு இருக்க. அது தூங்கணும் தொல்லை பண்ணாம வா. நீ shoe போடு school bus வந்துரும். அம்மா... நீ நம்ம beautyய நல்லா பாத்துக்கோ பிஸ்கட்லாம் குடு. நான் வந்து பால் வைக்கிறேன். சரி டா வா socks அழுக்காகிடும் shoe போடு. அம்மா இந்த shoe கால் உள்ளவே போக மாட்டுது. எனக்கு பிடிக்கலம்மா. நான் இன்னைக்கு செப்பல் போட்டுட்டு போறேன் ப்ளீஸ். இல்லடா கண்ணு, மிஸ் திட்டுவாங்க, இன்னைக்கு போட்டுட்டு போ. அம்மா இன்னைக்கு ஈவினிங் ஸ்கூலுக்கு வந்து பிக்கப் பண்ணிட்டு போய் புது shoe வாங்கி தருவேனாம் 😘😘. ஸ்வீட் அம்மா நீ 😘😘. உனக்காக தான்...