அன்பே சிவம்
டேய் சிவம் shoe போட்டியா??
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
அம்மாவின் குரல் சத்தமா கேட்டுச்சு அந்த மூன்றாம் வகுப்பு குறும்பு பையன் சிவத்துக்கு.
வாசல்ல நின்னு நாய்க்குட்டி கூட விளையாடிட்டு இருந்த சிவம் அந்த கருப்பு கலர் நாய் குட்டி கிட்ட பேசிட்டு இருந்தான் !!!
நீதான் பிளாக் பியூட்டி ஆஹ். நீ ஏன் இப்டி முழிச்சு பாக்கற என்ன, உன் அம்மா எங்க காணோம், எங்க போச்சு உன் அம்மா.
டேய் தங்கம் shoe போடாம அந்த குட்டிக்கிட்ட என்ன டா பேசிட்டு இருக்க. அது தூங்கணும் தொல்லை பண்ணாம வா. நீ shoe போடு school bus வந்துரும்.
அம்மா... நீ நம்ம beautyய நல்லா பாத்துக்கோ பிஸ்கட்லாம் குடு. நான் வந்து பால் வைக்கிறேன்.
சரி டா வா socks அழுக்காகிடும் shoe போடு.
அம்மா இந்த shoe கால் உள்ளவே போக மாட்டுது. எனக்கு பிடிக்கலம்மா. நான் இன்னைக்கு செப்பல் போட்டுட்டு போறேன் ப்ளீஸ்.
இல்லடா கண்ணு, மிஸ் திட்டுவாங்க, இன்னைக்கு போட்டுட்டு போ. அம்மா இன்னைக்கு ஈவினிங் ஸ்கூலுக்கு வந்து பிக்கப் பண்ணிட்டு போய் புது shoe வாங்கி தருவேனாம் 😘😘.
ஸ்வீட் அம்மா நீ 😘😘. உனக்காக தான் இன்னைக்கு shoe போட்டுட்டு போறேன்.
🎶🎵 ஹாரன்
சரி, " ஈவினிங் அம்மா வரேன் பை 👋👋"
பை 👋 மா 😘
மேடம் பஸ் பிரேக் டவுன், இங்க உங்க வீட்டு மா மர நிழல்ல நிறுத்தலான்னு வந்து நிறுத்திட்டேன். பின்னாடி இன்னொரு பஸ் அனுப்பிருக்காங்க அதுல ஏத்தி விட போறேன் ஒரு பத்து நிமிஷம் மேடம்.
பரவால்ல தாத்தா நான் அம்மா கூட நடந்து போறேன் இன்னைக்கு. வாம்மா ப்ளீஸ் நாம நடந்து போலாம். "கீர்த்தனா டெய்லி அவங்க அம்மா கூட நடந்து தான் போறா தெரியுமா".
சரி வா உடனே கீர்த்தனா புராணம் பாடாத.
அம்மாவும் பையனும் நடக்க ஆரம்பிச்சாங்க.
அம்மா அந்த பூ பாரேன் அழகா இருக்கு இவ்வளவு ரோட்ல விழுந்து இருக்கே.. ஏன் இதையெல்லாம் கட்டி விக்கலாம்ல. Yellow கலர்ல அழகா இருக்கு.
அம்மாவின் சிறு சிரிப்பு பதிலாக வந்தது.
இதை போல பதில் தெரியாத கேள்விகள் நிறைய கேட்ருக்கான் சிவம். ஆனா அன்பிற்கினியாள் இதை போல சிரிப்பு மட்டும் பதிலா சொல்லி சிவத்தை அமைதியாக்கிடுவா..
அப்போ திடீர்னு ஒரே சத்தம், சைக்கிள் பெல் சத்தத்தோட சேர்ந்து கேட்டுச்சு.
ரெண்டு பேரும் ஒண்ணா திரும்பி பாத்தாங்க.
கொக் கொக் கீ கொக் கொக்
அந்த சைக்கிள்காரர் ஒரு கூண்டுல போட்டு மொத்தமா ஆறேழு ப்ராய்லர் கோழிய எடுத்துட்டு போய்ட்டுருந்தாரு.
அது வரைக்கும் இது போல பாத்தே இருந்திராத சிவம் கண்ணுல ஒரு பயத்தோட
அம்மா என்னம்மா இவ்வளவு கோழிய கூண்டுல போட்டு எங்க எடுத்துட்டு போறாங்க.
'அவனோட கண்ணுல இருந்த பயம் கலந்த கலவரத்தை பார்த்த அன்புக்கு என்ன சொல்றதுன்னே தெரியல'.
எப்போதும் சிரிச்சு ஏமாத்தற சிரிப்பு கூட அவளுக்கு வரல.' இவனுக்கு பதில் சொன்னா இனிமே அசைவமே சாப்பிட மாட்டானே. இவனுக்கு பிடிச்சு சாப்பிடற சிக்கன் இவனுக்கு பிடிக்காம போய்டுமே. நான் என்ன செய்ய போறேன்னு தெரியலையே'.
அதுக்குள்ள ஸ்கூல் வந்துச்சு. வாசல்ல எல்லாரும் அவங்கவங்க பசங்கள கொண்டு வந்து ட்ராப் பண்ணிட்டு போய்ட்டுருந்தாங்க. கார், பைக், அப்பப்போ ஒன்னொன்னா வர ஸ்கூல் பஸ் எல்லாம் உள்ள போய்ட்டு இருந்துச்சு.
இவங்கள பாத்த செக்யூரிட்டி கொஞ்சம் அதிசயமா பார்த்தாரு. இன்னைக்கு தான் இத்தனை வருஷத்துல நடந்து வரது ஸ்கூலுக்கு.
சிரிச்சிகிட்டே அவனை சந்தோசமா உள்ள அனுப்பினாரு. அன்பை பார்த்து வணக்கமும் சொன்னாரு. அங்கேயே நின்னு பார்த்துகிட்டு இருந்த அன்புக்கிட்ட. "மேடம் நாங்க பாத்துப்போம் போய்ட்டு வாங்க அப்டினு சிரிச்சிகிட்டே சொன்னாரு".
அவளும் மனசுல இருக்க கலக்கத்தை விட்டுட்டு சிரிச்சிட்டு நடந்து வீட்டுக்கு வர ஆரம்பிச்சா.
'எப்படியும் friends எல்லாரோடையும் பேசி விளையாடினா எல்லாம் மறந்துரும்' அப்டினு நெனச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்தா.
சிவம் எவ்வளவு தான் குறும்புத்தனம் இருந்தாலும் அன்பான பையன். ரொம்ப sensitive ஆனா பையன். இத்தனை வருசமா அவனுக்கு தான் சாப்பிடற அசைவ சாப்பாடெல்லாம் இந்த மாதிரி உயிர்களை கஷ்டப்படுத்தி தான் சாப்பிடறோம்னு தெரியாமலே வளர்த்துட்டாங்க அன்பிற்கினியாளும் ஆதித்தியனும்.
பிறந்தப்போவே ப்ரோடீன் குறைபாடு அதிகமுள்ள குழந்தையா பிறந்தான் சிவம். அவனை அதிக கவனம் எடுத்து பாத்துக்கிட்டாங்க அன்பும் ஆதியும். அவனுக்கு protein குறைபாடு இருக்கறதுனால கண்டிப்பா இறைச்சி குடுக்கணும் னு மருத்துவர் சொன்னதால அவனுக்கு இறைச்சி குடுத்து வளர்க்க ஆரம்பிச்சாங்க.
உயிர்களிடத்தில் நேசத்தை சொல்லிகுடுத்த ரெண்டு பேரும். அவன் உயிர கஷ்டப்படுத்தி தான் அவனுக்கு பிடிச்ச மட்டன் பிரியாணியும், fried சிக்கனும் சாப்பிடறோம்னு சொல்லாம மறைச்சிட்டாங்க.
எல்லாரும் ஸ்கூல்ல பேசிக்கறப்போ . எது பிடிச்சிருக்கு எது டேஸ்ட் ஆஹ் இருக்குன்னு பேசி பழகினதால சிவமும் இன்னும் எப்படி இறைச்சிக்காக உயிர்கள் கொல்லப்படுதுன்னு தெரியாமலே இருந்தான். எல்லா குழந்தைகளும் உயிர் பிரியும் காட்சியை discovery channel ல தான் பாத்து தெரிஞ்சிக்கறாங்க. அதுலையும் ஒரு விலங்கு இன்னொரு விலங்கை கொன்னு சாப்பிடுது இல்லயா அதனால பெரிய அளவுல மன உணர்ச்சிகள் பாதிக்க மாட்டுது. ஆனா கண்ணனுக்கு நேரா ஒரு காட்சியை பார்த்தால் என்னாகுமோ அது தான் சிவத்துக்கு இன்னைக்கு நடக்குது.
கடலுணவுல ஏதும் பெரிய விருப்பமில்லாத சிவம் சிக்கனும் மட்டனும் நல்லா சாப்பிடுவான். ஆனா இன்னைக்கு பார்த்த அந்த காட்சி அவனை ஒரு உலுக்கு உலுக்கிட்டு தான் சொல்லணும்.
ஸ்கூல்ல எப்போதும் குறும்பு பண்ணி கீர்த்தனாகிட்ட சேட்டை செஞ்சு விளையாடற சிவம். Mam கிட்ட அறிவா பேசி கைதட்டல் வாங்கற சிவம். எல்லாருக்கும் பிடிச்ச அன்பான துரு துரு பையன் சிவம். இன்னைக்கு யார்கிட்டயும் பேசாம தனியா அமைதியா உக்காந்திருந்தான்.
கீர்த்தனா
"டேய் சிவம் என்னடா உம்முனு இருக்க "
கீர்த்தி "இன்னைக்கு காலைல நானும் அம்மாவும் நடந்து வந்தோம் ஸ்கூலுக்கு ".
அதுக்குத்தான் சோகமா இருக்கியா சிவா
இல்ல கீர்த்தி, அப்போ ஒருத்தர் சைக்கிள்ல ஒரு கூண்டுல நிறைய கோழியை போட்டு எடுத்துட்டு போறாரு. அதெல்லாம் பாக்க பாவமா இருந்துச்சு.
ஆமாண்டா நான் daily பாப்பேன். அதை அப்டி எடுத்துட்டு போய் தான் ஒரு machine ல போட்டு அது செத்து போனதுக்கப்பரம் நமக்கு சிக்கன் தராங்கலாம்.
நான் இனிமே non-veg சாப்பிட மாட்டேன் கீர்த்தி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இவ்வளவு கஷ்டப்படுத்தி தான் கொன்னு சாப்பிடணுமா கீர்த்தி.
சிவா எனக்கும் பாவமா தான் டா இருக்கு. அம்மாகிட்ட கேட்டா சாப்பிட்டா தான் ஆரோக்கியமா இருக்கலாம்னு சொல்றாங்க. டேஸ்ட் டாவும் இருக்குல்ல டா.
சிவத்தோட கண்ணு கலங்கியிருந்துச்சு. "இல்ல கீர்த்தி நான் இனிமே non-veg எதுவும் சாப்பிட மாட்டேன்".
அன்னைக்கு சரியா சாப்பிடவும் இல்ல கீர்த்தியும் சிவமும்.
Evening bell அடிச்சாங்க. ரெண்டு பேரும் வீட்டுக்கு போனாங்க.
சிவத்துக்கு shoe வாங்க வெளில அன்பும் ஆதியும் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க.
அப்பாவையும் சேர்த்து பார்த்தோன சோகமா இருந்த சிவம் சந்தோசமா ஆனான்.
அவன் சொல்ல போறத கேட்டு ரெண்டு பேரும் என்ன react பண்ண போறாங்கன்னு யாருக்குமே தெரியல.
அப்பா எப்போ வந்தீங்க hospital ல இருந்து, நாலஞ்சு நாளாகும்னு அம்மா சொன்னாங்க.
உனக்கு shoe வாங்க போகணும்னு அம்மா call பண்ணினாங்க. உடனே கிளம்பிட்டேன்.
அப்பா ஒரு ஸ்வீட் நியூஸ் சொல்லட்டா.
கண்டிப்பா. "வந்து அம்மாவும் நீயும் கார்ல ஏறுங்க போய்கிட்டே பேசலாம் "
கார் கடை வீதி பக்கம் போக ஆரம்பிச்சது .
அந்த இதமான பென்ஸ் ல அவங்க மூனு பேரும் போறப்போ, ஆதி ஆரம்பிச்சான் "என்ன சிவபெருமான் அவர்களே இன்றைக்கு தாம் எனக்கு வழங்க போகும் பாடம் என்ன ".
சிவம், "மகனே ஆதி நானும் இனி உன்னையும் உன் மனைவியையும் போல் இனி புலால் உண்ண மாட்டேன்.
ஆதி, "ஆகா ஆகா அன்பே சிவம் என்றறீந்தீர்களோ இன்று காலையில்"
சிவம், "ஆம் மகனே, இதற்கு மேலும் என்னை தாங்களிருவரும் வறுபுறுத்தக்கூடாது என்று ஆணையிடுகிறேன் ".
😁😁 இல்லாவிட்டால் நெற்றிக்கண் திறப்பீரோ,
இல்லை உண்ணா நோன்பிருப்பேன்.
அன்பு, "ஆதி அவனுக்கு protein தேவை இது என்ன விளையாட்டு பேச்சு அவன்கிட்ட ".
இல்ல அன்பு இனி அவனுக்கு protein content உள்ள flesh தான் கொடுக்கணும்னு இல்ல, அதை போல இருக்க தாவர உணவுகளையே கொடுக்கலாம்னு சொல்லிட்டாரு டாக்டர். அதோட இன்னைக்கு நடந்ததை கேளு. நீ காலைல நடந்தத சொன்னவுடனே நான் அவர்கிட்ட பேசினேன். அவர் " அப்போவே தாவர உணவை குடுக்க சொல்லிருப்பேன் ஆனா இது கொஞ்சம் குழந்தைகள் ஆர்வமா சாப்பிடுவாங்கன்னு சொன்னேன். சிவம் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கறப்போ அவனுக்கு பிடிக்கலைன்னா நீங்க இதை நிறுத்திக்கலாம். அவனுக்கும் குறைபாடு சரியாகிட்டு. நான் அவனுக்கு மருந்துகளை விட உணவாலேயே இதை சரி செய்யணும்னு நெனைச்சேன்.அதனால தான் இவ்வளவுநாள் உங்களை கட்டாயப்படுத்தினேன். ஆனா நீங்களும் உங்க மனைவியும் great ஆதி ".
Sir நீங்க என்னோட சீனியர் நானே உங்ககிட்ட படிச்சு தான் இந்த இடத்துல இருக்கேன், என்ன போய் நீங்க வாங்கன்னு சொல்றிங்க. எப்போதும் போல ஆதின்னு கூப்பிடுங்க Sir ப்ளீஸ்.
நீயும் உன்னோட அன்பும் என்னோட மாணவர்கள்னு சொல்லிக்கவே ரொம்ப பெருமையா இருக்குடா. அதே போல ஒரு சின்ன பொறாமை கூட உன் மேல. சொல்லிட்டு கிட்ட வந்து அவனை கட்டிபிடிச்சிக்கறார்.
ரெண்டு பேர் கண்ணுலயும் ஆனந்த கண்ணீர்.
நான் நீயும் அன்பும் DCh வந்து சேர்ந்த அப்போவே சொன்னேன். உன் பக்கத்துல நிக்கறப்போவே ஒரு நல்ல மனநிலை வருது, யார்கிட்டயும் பாக்காத ஒரு உயிரோட்டம் இருக்கு உங்கிட்டன்னு.
நீ அப்போ சொன்ன நாங்களெல்லாம் கேலி செஞ்சோம், இதெல்லாம் உயிரை கொன்னு சாப்பிடாம இருக்கறது தான் காரணம். எல்லா உயிர்கள்கிட்டயும் அன்பு செலுத்தணும்னு நீ சொன்னப்போ எல்லாரும் உன்ன சாமியார்னு கேலி செஞ்சோம். இப்போ அதெல்லாம் உண்மைன்னு நிரூபணம் ஆகிடுச்சு தன்னால.
நீ தான் உலகத்துல இருக்க தலைசிறந்த பத்து குழந்தைகள் மருத்துவர்ல ஒருத்தர் அப்படினு விருது வாங்கியிருந்த. அப்போவும் நான் உன்னை கூப்பிட்டு, நீ நாலாவது இடம் நான் முதல் இடம்னு கொஞ்சம் விளையாட்டா பேசினேன். உன்னோட அந்த தாவர உணவு பழக்கத்தை விட்டா நீதான் முதல்ன்னு சொன்னேன். அப்போகூட நீ சிரிச்சிகிட்டே போய்ட்ட.
அப்போ தான் உனக்கு சிவம் பொறந்தான் protein சத்து குறைச்சலா இருக்குன்னு நான் தான் உன்கிட்ட ரொம்ப கட்டாயப்படுத்தி அவனுக்கு இறைச்சி குடுக்க சொன்னேன். அதுல நல்ல நோக்கம் இருந்ததால உன் மனைவி ஒத்துக்கிட்டா நீயும் அரைமனசோட குழந்தைக்காக ஒத்துக்கிட்ட.
ஆனா நேத்து நைட் கண்ணாடி பாட்டில் ஒடைஞ்சு தலைலையும் கழுத்துலயும் குத்தி உயிருக்கு போராடிகிட்டு வந்த என்னோட பேரனை பாத்துட்டு,
சொல்லும்போதே அவருக்கு குரல் உடைஞ்சு அழுகைல ஆதியை கட்டி பிடிச்சுக்கறார்.
ஆதி, " Sir அழாதீங்க ப்ளீஸ் relax, "
இல்லடா ஆதி video conferencing ல கூட இந்த உலகத்துல பெஸ்ட் குழந்தைகள் நிபுணர் நீங்கதான், உங்களுக்கே தெரியும் மூளைல glass இறங்கிருக்கு காப்பாத்தவே முடியாதுன்னு எல்லாம் சொன்னாங்க.
என்னோட உலகமும் என்னோட குடும்பதோட உலகமும் சூன்யம் ஆகினாற்போல நின்னுட்டோம்.
அப்போ நீதாண்டா சாமி மாதிரி வந்து நின்ன எனக்கு. நான் காப்பாத்தி தரேன் "பிரபாவை" நீ சொன்ன அந்த நொடி.
அவனை கையெடுத்து கும்பிட்டு, கடவுளே இல்லை உலகத்துலன்னு சொல்ற கூட்டத்துல இருந்த நான், நீதான் கடவுள்னு நெனச்சேன் டா.
எல்லாரும் கை நடுங்க பயந்து போய் ஓடற ஒரு surgery. Neuro surgen கூட செய்யமாட்டான், இதுவரைக்கும் உலகத்துலயே நடக்காத ஒரு surgery அதை செஞ்சு கடவுளாகிட்ட டா ஆதி நீ.
🙏🙏🙏🙏🙏
நீதாண்டா கடவுள் இனிமே என் குடும்பத்துக்கு.
நீ அசாதரணமான செஞ்ச இந்த surgery, என்னோட பேரனோட உயிர காப்பாத்திட்டு.
இதை video conferencing ல பாத்த உலக மருத்துவர்களெல்லாம்,
ஆதி is now a god அப்படினு சொல்லிட்டு போய்ட்டான்.
அவரோட குடும்பத்துல உள்ள எல்லாரும் வந்து ஆதியை கட்டிப்பிடிச்சு நன்றி சொல்லிட்டு போனாங்க. எல்லாரும் அவனை கடவுளாதான் பாத்தாங்க.
இதை சொல்லி முடிச்சிட்டு வண்டியை கடையில் உள்ள parking ல நிறுத்தினான் ஆதி.
உடனே அன்பும், சிவமும் அவனை கட்டிபிடிச்சிகிட்டாங்க. அன்பிற்கினியாள் கண்ணுல இருந்து வந்த கண்ணீரை துடைச்சிவிட்டான் ஆதி.
அப்போ சிவம் சொன்னான், "அப்பா நீங்க போன வாரம் சொல்லிகுடுத்த அதிகாரத்துல கடைசி குறள்
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை, எல்லா உயிர்களும் கைதொழுது தெய்வமாக நினைத்துப் போற்றும்".
ஆதி, "என்னைக்குமே அன்பு தான் கடவுள்".
சிவம், "அப்போ அம்மாதான் கடவுள்".
அன்பிற்கினியாள், "அன்பே சிவம், அப்போ நீதான் எங்க ரெண்டு பேருக்கும் கடவுள் ".
"அப்போ வந்து சிவம் கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க குழந்தைகளே" சிரிச்சிக்கிட்டே ஆசி வழங்கினான் சிவம்.
" அன்பே சிவம் "
தமிழ்
Comments
Post a Comment