Posts

வாழ்வே தவம்

காரிருள் களைந்து கதிரவன் முளைத்து முக்கால் மணி நேரம் ஆகியிருந்தது.  ஏழு முறை கடிகாரம் டிங் டாங் என அடித்தது. jogging முடித்துவிட்டு வீட்டுக்குள் வந்த ஆதி, நேராகக் குளிக்கப் போனான். பதினைந்து நிமிடத்தில் வெளியே வந்தவன், தன் அறையில் சென்று தியானம் செய்ய அமர்ந்தான். அவனுக்கு இது தினமும் மன அமைதிக்கான வழக்கம் என்றாலும், இன்று நேரம் போனதே தெரியாமல் அமர்ந்திருந்தான். அவன் எழுந்திருக்கும் முன்பு அவனைப் பற்றி... தனிமை விரும்பி. அவனது எல்லா வேலைகளையும் அவனே செய்து கொள்வான், சில பல ஆயிரம் கொடுத்து வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளும் வசதி இருந்தும்.  நன்றாகச் சமைப்பான். பெரும்பாலும் காலை உணவாகப் பழங்களும் காய்கறிகளும் தான். அனைவருக்கும் நன்மை செய்யும் குணம். இனிமையாய்ப் பழகுவான்.     இதோ தியானத்திலிருந்து எழுந்து வந்தவன், சமையலறைக்குச் சென்று பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். ஆதி சென்னை அரசு மருத்துவமனையில் குழந்தை நல மருத்துவராய் இருக்கிறான். இப்போது அங்குதான் சென்று கொண்டிருக்கிறான். சென்னையின் நெரிசலில் ஆதியின் வண்டி அவனைப் போலவே பொறுமையாய...

கடவுளின் குழந்தை

அந்த நாள் எப்போதும் போல எல்லாருக்கும் விடிந்தது.  7 மணி, ஏழு முறை கடிகாரம் டொய்ங் டொய்ங் 🎵 அடிச்சது.  ஆதி ஜாகிங் முடிச்சிட்டு உள்ள வந்தான்,  நேரா குளிக்க போனான், குளிச்சவன் அவனோட தியான அறைக்கு போனான். 7.30கு உள்ள போனவன் சரியா ஒன்பது மணி அடிக்கும் முன்ன கண் விழுச்சுட்டான்.  அவன் இதுவரைக்கும் மணி பாத்ததே இல்ல தியானம் பண்றப்போ. தனிமையில்  வாழும் ஆதி அவனே அவனோட எல்லா வேலைகளையும் செஞ்சிப்பான். பல ஆயிரம் குடுத்து வேலைக்கு ஆள் வைக்கும் வசதி இருந்தும், அவனுக்கு அது பிடிக்கல.  எழுந்து கிச்சனுக்கு போனான், காலை உணவு எல்லாம் dry nuts மற்றும் fresh fruits.   சாப்பிட்டுட்டு கார் சாவிய எடுத்துக்கிட்டு கெளம்பிட்டான். கார் சென்னையின் ட்ராபிக் ல கொஞ்சம் நிதானமா போச்சு, இது வரை யார் மேலயும் பைக்லயோ கார்லயோ இடிச்சதே இல்ல.  இவன் மேல இடிக்க வந்து, இவன் ஒதுங்கி நெறய பேர் கீழ விழுந்துருக்காங்க, ஆனா அவங்கள நேர மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போய், டிரீட்மென்ட் செஞ்சு தான் அனுப்பி விட்ருக்கான் ஆதி.  ஆதி ஒரு மருத்துவர், தமிழ்நாட்ல பள்ளி இறுதி தேர்வுல முதன்மை மாணவனா வ...

அன்பே சிவம்

டேய் சிவம்  shoe   போட்டியா??  அம்மாவின் குரல் சத்தமா கேட்டுச்சு அந்த மூன்றாம் வகுப்பு குறும்பு பையன் சிவத்துக்கு.  வாசல்ல நின்னு நாய்க்குட்டி கூட விளையாடிட்டு இருந்த சிவம் அந்த கருப்பு கலர் நாய் குட்டி கிட்ட பேசிட்டு இருந்தான் !!! நீதான் பிளாக் பியூட்டி  ஆஹ். நீ ஏன் இப்டி முழிச்சு பாக்கற என்ன, உன் அம்மா எங்க காணோம், எங்க போச்சு உன் அம்மா.  டேய் தங்கம் shoe  போடாம அந்த குட்டிக்கிட்ட என்ன டா பேசிட்டு இருக்க. அது தூங்கணும் தொல்லை பண்ணாம வா. நீ shoe  போடு school bus  வந்துரும்.  அம்மா... நீ நம்ம beautyய  நல்லா பாத்துக்கோ பிஸ்கட்லாம் குடு. நான் வந்து பால் வைக்கிறேன்.  சரி டா வா socks அழுக்காகிடும் shoe போடு.  அம்மா இந்த shoe கால் உள்ளவே போக மாட்டுது. எனக்கு பிடிக்கலம்மா. நான் இன்னைக்கு செப்பல் போட்டுட்டு போறேன் ப்ளீஸ்.  இல்லடா கண்ணு, மிஸ் திட்டுவாங்க, இன்னைக்கு போட்டுட்டு போ. அம்மா இன்னைக்கு ஈவினிங் ஸ்கூலுக்கு வந்து பிக்கப் பண்ணிட்டு போய் புது shoe  வாங்கி தருவேனாம் 😘😘.  ஸ்வீட் அம்மா நீ 😘😘. உனக்காக தான்...

கொள்கை

நம்மெல்லாம் யாருக்கும் அடிமை இல்ல. நமக்கு திறமை இருந்தா போதும், யாருக்கும் கை கட்டி அடிமை வேலை பாக்கணும்னு அவசியமில்லை.  சதீஸ் சொல்லிட்டுருந்தான் அஜய் கிட்ட.  இவங்க ரெண்டு பேரும் ஐடி ஊழியர்கள். சதீஸ் கொள்கைகளோட வாழணும்னு நினைக்கற ஒரு சாதாரண சராசரி மனுஷன். அஜய் ரொம்ப ஜாலியான என்ன ஆனாலும் ஆகட்டும்னு வாழற ஒரு கேரக்டர். அன்னைக்கு பெர்பார்மன்ஸ் அப்பரைசல் மீட்டிங்குல மேனேஜர்  சதீஸ் நீ ஏன் உன்னோட பெர்பார்மன்ஸ் மெயில் பாக்கல.  நான்தான் பெஸ்ட் பெர்பார்மர்னு எனக்கு தெரியும் ஜெகன். அதோட எனக்கு முக்கியமான ஒரு பெண்டிங் ஒர்க் இருந்துச்சு அதனால தான் பாக்கல.  சதீஸ் நீ இதோட மூணாவது தடவை இப்படி சொல்ற. உனக்கு வேலைல பொறுப்பில்லை,  உன்னோட பெர்பார்மன்ஸ் உனக்கே தெரியல உனக்கு நான் ஏன் அப்பரைசல் குடுக்கணும். உன்னோட சாலரி கூட இந்த மாசம் கிரெடிட் ஆகாது, இப்போ நீ போலாம்.  இது முடிஞ்ச பிறகு தான் சதீஸ் அந்த மாதிரி அஜய் கிட்ட சொல்லிட்டு இருந்தான்.  மறுநாள் வேலைய விட்டுட்டு இந்த மனஜேர்க்கு மெயில் பண்ணாம. அவங்க ஆப்பரேஷனல் மனஜேர்க்கு மெயில் பண்ணிட்டு. லேப்டாப் ஐடி கார்டெல்லாம் திர...

மொழிகள்

உனது பக்கங்களின் கவிதைகள் மட்டுமே  என் தூங்கா இரவுகளின் துணையாய் வருகிறது  #உனதுகுறிப்பிலிருந்து  உன் கவிதைகள் மொழிகள் நான் பேச தெரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுக்கும் மொழிகள்.  #உனதுகுறிப்பிலிருந்து  இந்த இரவில் நீ இல்லாத ஏக்கம்  உனக்காக எனை தேட அனுப்பி விட்டது  #உனதுமொழிகள்    

வெயிலோடு மழை

மேல் மேகம் கருத்திருக்க கீழ் மேகம் வெளுத்திருக்க மழை வருமோ வராதோ என காத்திருக்க வெயிலோடு தூறலாய் உனக்கு பெயரென்ன வைக்க

தெளிவு

பதில் இல்லா என் கேள்விகள் ??? மௌனங்களாய் என் பதில்கள் வேண்டுவதெல்லாம் ஒரே பதில் மீண்டும் ஒரே ஒரு முறை மட்டும் என்னவாக நான் வேண்டும் உனக்கு??? முடிவும் தொடக்கமும் உன் உ...