கொள்கை
நம்மெல்லாம் யாருக்கும் அடிமை இல்ல. நமக்கு திறமை இருந்தா போதும், யாருக்கும் கை கட்டி அடிமை வேலை பாக்கணும்னு அவசியமில்லை.
சதீஸ் சொல்லிட்டுருந்தான் அஜய் கிட்ட.
இவங்க ரெண்டு பேரும் ஐடி ஊழியர்கள். சதீஸ் கொள்கைகளோட வாழணும்னு நினைக்கற ஒரு சாதாரண சராசரி மனுஷன். அஜய் ரொம்ப ஜாலியான என்ன ஆனாலும் ஆகட்டும்னு வாழற ஒரு கேரக்டர். அன்னைக்கு பெர்பார்மன்ஸ் அப்பரைசல் மீட்டிங்குல மேனேஜர்
சதீஸ் நீ ஏன் உன்னோட பெர்பார்மன்ஸ் மெயில் பாக்கல.
நான்தான் பெஸ்ட் பெர்பார்மர்னு எனக்கு தெரியும் ஜெகன். அதோட எனக்கு முக்கியமான ஒரு பெண்டிங் ஒர்க் இருந்துச்சு அதனால தான் பாக்கல.
சதீஸ் நீ இதோட மூணாவது தடவை இப்படி சொல்ற. உனக்கு வேலைல பொறுப்பில்லை, உன்னோட பெர்பார்மன்ஸ் உனக்கே தெரியல உனக்கு நான் ஏன் அப்பரைசல் குடுக்கணும். உன்னோட சாலரி கூட இந்த மாசம் கிரெடிட் ஆகாது, இப்போ நீ போலாம்.
இது முடிஞ்ச பிறகு தான் சதீஸ் அந்த மாதிரி அஜய் கிட்ட சொல்லிட்டு இருந்தான்.
மறுநாள் வேலைய விட்டுட்டு இந்த மனஜேர்க்கு மெயில் பண்ணாம. அவங்க ஆப்பரேஷனல் மனஜேர்க்கு மெயில் பண்ணிட்டு. லேப்டாப் ஐடி கார்டெல்லாம் திருப்பி குடுத்துட்டு வந்துட்டான்.
ஆனா அவனுக்கு ரிலீவிங் லெட்டரும் வரல. எக்ஸ்பிரீயன்ஸ் செர்டிபிகேட்டும் கொடுக்கல. எத்தனையோ தடவ மெயில் பண்ணினான் வரல.
ஆப்பரேஷனல் மேனேஜர் கூட பதில் சொல்லல. இவனும் வேற வழி இல்லாம ஜெகனுக்கு கால் பண்ணினான்.
சொல்லு சதீஸ் என்ன வேணும்
ஜெகன் என்னோட ரிலீவிங் லெட்டரும் வரல. எக்ஸ்பிரீயன்ஸ் செர்டிபிகேட்டும் கொடுக்கல ஏன்.
நீ என்கிட்ட வந்து சொல்லாம போய்ட்ட. எனக்கு மெயில் கூட பண்ணல. நான் நீ சொல்லாம போயிட்டன்னு சொல்லி உன் பைல் கிளோஸ் பண்ணி அனுப்பிட்டேன். உன்னோட லேப்டாப் கூட திருப்பி குடுக்கலைனு போட்டுட்டேன்.
ஜெகன் ஏன் இப்படி செஞ்சீங்க.
நீ எனக்கு மரியாதை தராம என்னோட மேனேஜர்க்கே மெயில் பண்ணிட்டு போன, நான் யாருனு உனக்கு காமிக்கணுமில்ல.
சாரி ஜெகன். நான் உங்களுக்கு அபோலஜி மெயில் பன்றேன். எனக்கு என்னோட ரிலீவிங் லெட்டரும், எக்ஸ்பிரீயன்ஸ் செர்டிபிகேட்டும் குடுங்க ப்ளீஸ்.
பாக்கலாம் முதல்ல நீ மெயில் அனுப்பு. அப்போ யோசிக்கிறேன் பை.
சதீஸ் அழுகை ஆத்திரம் பொங்க கண்ணீரோட அவனோட கொள்கைகளுக்கு மாறாக அந்த அபோலஜி மெயில் அனுப்பினான்.
Comments
Post a Comment