தூங்கா இரவுகள்

இருள் சூழும் நேரம்
எனக்கு மட்டும் பகல் தானோ

நீந்தி கூட முயற்சித்தேன்
கடக்க முடியா இரவுகள்

என்னை அரை போதையில்
அனத்த விட்டு போனது

ஒளி இல்லா ஒலியும் இல்லா
இரவு நேரங்கள் தனிமை

பிதற்றும் உள் குரல் ஞான
ஊற்று போல எனக்கு

தேடும் தேடல்கள் கோடி அதில்
நான் எதை நோக்கி

நானா அது என்ன நான் சொல்
நீ யார் அது

இருளில் வைக்கும் அடிகள் அவை
நிதானம் என்று நகைக்கும்

தேடியது எல்லாம் பொய் ஆனால்
தேடியவன் நீ யார்

நகைக்கும் உள் குரல் அது
என்ன கதை கவிதையோ

Comments

Popular posts from this blog

வெயிலோடு மழை

வாழ்வே தவம்

தெளிவு