காதல்

கொடூரம்

இரணம்

வலி

அலறல்

அழுகை

கண்ணீர்

ஏமாற்றம்

இது உடைந்து போன காதலின்
குரல் அல்ல

உண்மையின் ஏமாற்றம்

உண்மையான காதலின் அன்பின் ஏமாற்றம்

நீ செல்லும் பாதையில் பூக்கள் வளர்த்து விட்டேன்

இனி நீ தனியாக செல்வாய் என தெரியும்

வழியில் உள்ள முட்களை எடுக்க நான் தேவை படமாட்டேன்

அதற்கு நீ நல்ல அழகான காலணி வாங்கி கொள்வாய்

ஊரெல்லாம் பெண்ணுரிமை பேச

நானெண்ணவோ ஆணுக்கு அதிகாரம் கேட்கிறேன்..

உன் காதல் பிச்சைக்காக

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா

நீ தந்தது உயிர் வதைதனோ

என்றோ ஒரு நாள் நீ மிதித்து நான் சாக வரம் வேண்டி

தயாராகி விட்டேன் இன்று

Comments

Popular posts from this blog

வெயிலோடு மழை

வாழ்வே தவம்

தெளிவு