சேலை

கண்ணின் கருமணி கொண்டு சிரிக்கும் நீ
சேலை கட்டி என்னை பார்வையால் வெட்டி போனாய்.
சிரிக்கும் செம்பவள வாய் அழகில் என்னை கொன்று சென்றாய்..
மெல்லிடை சிறிது தெரிய நெகிழும் உன் சேலை
என் மனது ஓடி விளையாடும் சோலை.

சேலை கட்டிய உன் அழகின் தெளிவில்
நான் தேடும் நெலிவில் எனை தொலைத்தேன்

புரிந்த காதல் போதும் எப்பொழுது நம் உயிர்கள் கூடும்

நீயும் நானும் ஒன்றாக மறுவார்த்தை பேசாமல்
உன் சேலையில் ஒளிந்து பிடித்து விளையாடுவோம்...

Comments

Popular posts from this blog

வெயிலோடு மழை

வாழ்வே தவம்

தெளிவு