கீர்த்தனைகள்

மீண்டும் உன் குரல் கேட்டு
அதில் என்னுலகம் செய்து உன்
மடியில் கண்ணசந்து போக வேணுமடி

நீ கொண்ட கோபமெல்லாம் என்
கண்ணீர் கரைத்து நீர்த்து
இதழ் முத்தம் தர வேனுமடி

மாயமெல்லாம் மாறிபோக நான்
உன்னை தேடி அலைய கிட்டாத
வரம் எனக்கு நீ தர வேனுமடி

உன்னோடு பேசிய பொழுதுகள்
நீ தந்த அர்த்தங்கள் நெஞ்சு நெறய
உன்னோடு உயிராய் கலந்திட வேனுமடி

கீர்த்திக்கு கீர்த்தி சேர்த்து நான்
சொல்லும் கீர்த்தனைகள் உனக்கு
மட்டும்
நான் சொல்லும் காதல் புரிய வேனுமடி

Comments

Popular posts from this blog

வெயிலோடு மழை

வாழ்வே தவம்

தெளிவு